spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

-

- Advertisement -

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் என்பதே சமூக நீதிக்கு கோட்பாடாகும் என்று மத்திய மாநில உறவுகள் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினாா்.அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மத்திய மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப், “நாடு முதலில் என்று அடிக்கடி பேசுகிறார்கள், ஆனால் நான் அதற்கு சம்மதிக்கவில்லை, முதலில் அரசியலமைப்பு தான், அதன் பிறகே நாடு என கூறினார்.

we-r-hiring

ஏனெனில், அரசியலமைப்பே நாட்டை உருவாக்கியதாக கூறிய அவர், குறிப்பாக இந்தியா போன்ற கூட்டாட்சி நாடு, அரசியலமைப்பின் மூலம் ஒன்றிணைக்கப்பட்டதாகவும், நாங்கள் அரசியலமைப்பில் கூட்டாட்சி அமைப்பாக உள்ளோம் என்றும், ஆனால் உண்மையில் கூட்டாட்சியாக இயங்குகிறோமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது” என்றாா்.

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

அவரைத் தொடர்ந்து, கருத்தரங்கில் பேசிய முன்னாள் நீதிபதி செலமேஸ்வர், கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா கூட்டாட்சி நாடு என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தாலும், அதில் சந்தேகமுள்ளதாக தெரிவித்தார். அமெரிக்கா 13 மாநிலங்களின் ஒப்பந்தத்தில் உருவான கூட்டாட்சி; இந்தியா அப்படியல்ல என்றும், இந்தியாவில் மாகாணங்கள் பிரிட்டிஷ் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டவை எனவும், அதில் எந்தவித சுயாட்சி இல்லை என்றார்.

மாநில ஆட்சி விவகாரங்களை நடத்த “அனைத்து இந்தியா சேவை அதிகாரிகள்” தேவையா? ஏன் மாநிலம் தானாகவே நிர்வகிக்கக்கூடாது என்ற கேள்வியை எழுப்பினார். “பஞ்சாயத்து நடத்த IAS அதிகாரி தேவையில்லை; பிளாக் டெவலப்மெண்ட் அதிகாரி போதும்” என்றார்.

சட்டமன்ற அதிகாரப் பிரிவில் உள்ள மத்திய பட்டியல், மாநில பட்டியல், ஒருங்கிணைந்த பட்டியல் குறித்து சுட்டிக்காட்டி, “கூட்டாட்சி நாடுகளில் ஒருங்கிணைந்த பட்டியல் இல்லை. இந்தியாவில்தான் இருக்கிறது. கல்வி, காடு போன்றவை மாநிலங்களின் அதிகாரத்திலிருந்து மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இது கூட்டாட்சிக்கே முரணானது” என்றார்.

நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், “நான் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது, உச்சநீதிமன்ற கொலீஜியம் என்னை மாற்ற முடிவு செய்தது என்று கடிதம் வந்தது. ஆனால் எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடக்கிறது” என்று குறிப்பிட்டார்.அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

நிதி தொடர்பிலும் மாநிலங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. அதிக மக்கள் தொகையுள்ள மாநிலங்கள் தீர்மானங்களில் அதிக செல்வாக்கு பெறுகின்றன. இது சமநிலையற்றதாகும் மேலும், அவர்  “இந்திய அரசியலமைப்பில் ஆங்கிலம் கற்றுக் கொள்வது, பேசுவது தவறல்ல. நான் தமிழிலும் பேசுவேன், அதே நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் இந்தி கட்டாயம் செய்ய வேண்டும் என்ற கருத்து கூட்டாட்சிக்கு முரணானது” என தெரிவித்தார்.

முடிவாக, இரு முன்னாள் நீதிபதிகளும் – இந்திய கூட்டாட்சி அமைப்பு, அதிகாரப் பிரிவு, நீதித்துறை வெளிப்படைத்தன்மை, நிதி பகிர்வு மற்றும் மொழிக் கொள்கை ஆகியவை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினர்.

அவர்களைத் தொடர்ந்து, பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் அரசியல் சமூக நீதி அரசியலாக உள்ளதாகவும், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைவருக்கும் சென்றடைந்துள்ளதாக கூறினார்.

மேலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடகையில் தமிழ்நாடு பலத்துறைகளில் முன்னணி மாநிலமாக  உள்ளதாக கூறிய அவர், மத்திய அரசு தமிழ்நாடு அரசிற்கு உரிய நீதி பங்கை வழங்காமல் குறுகிய அரசியல் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு நெருக்கடிகளை மீறி போராடி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம் என்றார்.

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

அதேபோல், தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் பாஜக தலைமை அல்லாத ஆட்சி நடைபெறுவதாக கூறிய அவர், கூட்டாட்சிகளுக்கு எதிரான நடவடிக்கையை திராவிட முன்னேற்ற கழகம் எங்களுடைய இணைந்திருக்கக்கூடிய காங்கிரஸ்,விசிக,கம்யூனிஸ்ட் ஆகிய அனைத்து கட்சியும் இணைந்து கண்டித்ததாகவும், சர்க்காரியா ஆணையம் குறித்த இந்த கருத்துக்களுக்கு ஏற்ப இந்த ஆணையம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை மேற்கொள்ள உரிய பரிந்துரைகளை வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

பல தடைகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாக கூறிய அவர், மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி பங்கீட்டை மத்திய அரசு மறுப்பதாகவும், திமுக ஆட்சியில் இரட்டை இலக்கு வளர்ச்சியை 14 ஆண்டுகளுக்கு பின் அடைந்துள்ளோம் என்றும், இந்தி திணிப்பை அரசு முறியடித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து திமுக அரசு போராடி வருவதாகவும், அனைத்து விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றும், இந்த குழு அளிக்கும் பரிந்துரைகள் வலிமையாக இந்தியா உருவாக உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.

கட்டிட அனுமதி சிக்கல்கள் தீர்வு… அமைச்சர் முத்துசாமி

MUST READ