- Advertisement -
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சென்னையில் உருவானது.
புதிய வரலாறு படைக்கும் சென்னையின் ஹைட்ரஜன் ரயில். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் ஹைட்ரஜன் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்ட உள்ளது. 10 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஹைட்ரஜனில் இயங்கும் 2 என்ஜின்கள் உள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் ஹரியானாவில் உள்ள சோனிபட் – ஜிந்த வரை 87 கிமீ தூரத்திற்கு இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை விரைவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளாா்.
அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘பாம்’…. மனதை மயக்கும் மெலோடி பாடல் வெளியீடு!
