சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நள்ளிரவு முதலே பெய்த மழையால் ஆங்காங்கே தண்ணீா் தேங்கிக் கிடந்தது. கண்ணகி நகரை சோ்ந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி பணிக்கு இன்று காலை 4.50 மணியளவில் சென்றுள்ளாா். அப்போது அங்கு தேங்கிய மழைநீாில் கிடந்த கேபிள் மீது காலை வைத்ததால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே வரலட்சுமி உயிரிழந்துள்ளாா். உடனடியாக மின்சார வாாியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்று, மின்சாரத்தைத் துண்டித்து வரலட்சுமி உடலை மீட்டனா். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் இவா் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராயப்பேட்டையில் வீடு அபகரிப்பு – ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது
