கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பிலான முடிந்த திட்ட பணிகளையும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், திறந்து வைத்த கட்டிடத்தை சென்று பார்வையிட்டதோடு, மாணவர்களுடனும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துரையாடினார். அவருக்கு மாணவ மாணவிகள் பரிசு பொருட்களையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 18 கோடியே 26 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தையும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 17 கோடியே 65 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

கொளத்தூர் தொகுதிக்கு வந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வெடித்த நயினார் விவகாரம்! அண்ணாமலை – ஓபிஎஸ் கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!