spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகட்டிட அனுமதி சிக்கல்கள் தீர்வு… அமைச்சர் முத்துசாமி

கட்டிட அனுமதி சிக்கல்கள் தீர்வு… அமைச்சர் முத்துசாமி

-

- Advertisement -

கட்டுமான துறையில் நடைமுறையில் இருந்த பல சிக்கல்கள்  சரி செய்யப்பட்டுள்ளன.  கட்டிட அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து நடைமுறையில் உள்ள சிக்கல்களை தீர்த்துள்ளோம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளாா்.கட்டிட அனுமதி சிக்கல்கள் தீர்வு… அமைச்சர் முத்துசாமி

திமுக ஆட்சிக்கு வந்த உடன், கட்டிட அனுமதிக்காக சிங்கிள் விண்டோ சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பபட்டது. நேர விரயம் தவிர்த்து வரைபடத்துடன்  விரைவாக அனுமதி பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

2500 சதுரடி நிலத்தில் 3500 சதுரடிக்கும் குறைவாக கட்டிடம் கட்டுபவர்கள்  சுயமாக சான்று பெறக்கூடிய வகையில் கடந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டது.

ஒவ்வொரு அலுவலகத்திற்கும் போய் தடையில்லா சான்று அனுமதி வாங்குவது தவிர்த்து ஆன்லைன் மூலமாக பெறக்கூடிய நடைமுறை ஒரு வருடம் ஆகிறது.  இந்த நடைமுறையில் ஓராண்டில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் மனு அளித்து அனுமதி வாங்கியுள்ளாா்கள்.

கட்டுமான நிறைவு சான்று பெறுவதிலும் இருந்த சிக்கல்கள் தீர்க்க பட்டிருக்கின்றன கட்டுமான துறையினர் மட்டுமல்ல இதன் மூலம் பொதுமக்களும் இந்த வசதியை பெற வேண்டும், அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாதிரியான சலுகைகளை செய்து கொடுத்திருக்கின்றோம். கட்டுமான துறையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. அனுமதி பெறாத வீட்டு மனைகளையும் கிளியர் செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான வகையில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தாா்.

விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், விஜயின் மாநாடு குறித்து பேசி விளம்பரம் செய்ய விரும்பவில்லை. பொதுமக்களிடம்  கருத்துக்களை கேளுங்கள் அவர்களே சொல்வார்கள் முதலமைச்சரை பற்றி விமர்சித்ததை. அனைவரும் தவறு என்று சொல்கிறார்கள். முதல்வரின் வயது, அவரது அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். பொது மக்களிடம் அவர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்சிக்கு வந்தது முதல் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்து வருகின்றார். புதிதாக வரக்கூடிய பிரச்சனைகளையும் தீர்வு கண்டு வருகின்றார். இதற்கும் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள்.

திமுக தவெக விற்க்கு மட்டுமே போட்டி என சொல்கிறார். இதில் திமுகவை உயர்ந்த இடத்தில் பார்க்கிறார். அதற்காக நன்றி. அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி  அமைக்கும் என அமித்ஷா கூறியிருக்கிறார். அது எந்த மாநிலத்தில் என்று அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளாா்.

ரஜினியை நேரில் சந்தித்த 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகை!

 

MUST READ