பெண்கள் முன்னேற்றத்திற்கான சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 மகளிருக்கு இலவச பிங்க் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு, ஆட்டோக்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து வர்த்தக மையத்தில் நடைபெறும் ரோட்டரி சங்க செயல்பாடுகளை விளக்கும் கண்காட்சியையும் துவக்கி வைத்து, துணை முதல்வர் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,

சிறு வயதில் இருந்தே ரோட்டரி சங்கத்தின் சேவைகளை பார்த்து வருவதாக கூறினார். இன்றைக்கு மட்டும் 250 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை சேவையாக வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள ரோட்டரி சங்கம், 100 பெண்களுக்கு பிங்க் ஆட்டோவை வழங்கியுள்ளதற்கு பாராட்டுகளை தெரிவித்தார். இது பெண்கள் முன்னேற்றத்திற்கான சிறந்த முன்னெடுப்பு என்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற உதவிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
1990-களில் போலியோ தடுப்பு நடவடிக்கைகளை முத்தமிழறிஞர் கலைஞர் ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து மேற்கொண்டதை நினைவு கூர்ந்த உதயநிதி ஸ்டாலின், அந்த நடவடிக்கைகளால் தான் போலியோவை ஒழித்து, இந்தியாவிலே சாதனை செய்த முதன் மாநிலாக தமிழ்நாடு விளங்கியது என பெருமிதம் தெரிவித்தார். அதே வழியில் ரோட்டரி சங்கத்துடன் நல்ல உறவை தமிழக முதல்வர் பேணி வருவதாகவும் குறிப்பிட்டார். மழை-புயல் காலங்களில் ரோட்டரி அமைப்பு, மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் “நம்ம school, நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் ” ரோட்டரி அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, வருடத்திற்கு 1000 பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர உள்ளதையும் துணை முதல்வர் சுட்டிக்காட்டினார். ரோட்டரி அமைப்பின் பல்வேறு பணிகளை பாராட்டுவதாக கூறிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ரோட்டரி கண்காட்சி வெற்றி பெறவும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.
ரெஸ்டோபாரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சி பி ஐ க்கு மாற்ற வேண்டும் – நாராயணசாமி வலியுறுத்தல்