நாங்கள் நாத்திகர்கள் அல்ல பகுத்தறிவாளர்கள், கல்லூரியும் ஒரு விவசாயம் தான் அது தான் ஒரு அறிவு விவசாயம் நாடாளுமன்ற உறுப்பினர் கமலஹாசன் மேடையில் பேசியுள்ளாா்.சென்னை வண்டலூரில் உள்ள VIT சென்னை கல்லூரியில் “CRYSTAL CONNEXIONS ALUMINI MEET 2025 விழா நடைபெற்றது. இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பில் இருந்து கடந்த இறுதியாண்டில் பட்டப்படிப்பு முடித்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய குடும்பங்களோடு கலந்து கொண்டனர். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கமலஹாசன் பங்கேற்றார்.
மேலும் விஐடியின் நிறுவனர் விஸ்வநாதன், விஐடியின் துணைத் தலைவர் செல்வம், கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி காலகட்டத்தில் சிறந்த முறையில் விளங்கிய முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக கல்வி மற்றும் ஆராய்ச்சி விருது, நிறுவன தொழில் வகை விருது, தொழில்முனைவு விருது, சமூக வளர்ச்சி விருது, இளம் சாதனையாளர் விருது என ஐந்து விருதுகள் நாடாளுமன்ற உறுப்பினர் கமலஹாசன் கல்லூரியின் நிறுவனர் மேலும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் வழங்கினர்.

சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆராய்ச்சியாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் மகாஜன் சாகர் பாஸ்கருக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது. இரண்டாவது முதன்மை பொறியாளர் டிஜிட்டல், மோட் மெக்டொனால்டு, அஸ்வனி ஜாவிற்கு நிறுவன தொழில் வகை விருது, வழங்கப்பட்டது. மூன்றாவதாக ஆர்.எஸ், நிறுவனர் & நிர்வாக இயக்குநர் ராம் குமாருக்கு தொழில்முனைவு விருது வழங்கப்பட்டது. நான்காவது ஆலோசகர், உதவி தொழில்நுட்பம்கல்வி ராஜேந்திரனுக்கு சமூக வளர்ச்சி விருது வழங்கப்பட்டது. இறுதியாக அட்ரிக் அல் டெக்னாலஜி தலைமை நிர்வாக அதிகாரி விஜய்க்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் கமலஹாசன் மேடைபேச்சு:-
மாணவர்கள் தோல்வியை கண்டு பின்னோக்கி போக கூடாது முன்னோக்கி தான் செல்ல வேண்டும். கல்வி என்பது ஒரு மனிதருக்கு ஒரு ஆயுதம் போன்று. நான் தோல்வி தோல்வி என்று கூறுகிறேன் என்று பார்க்காதீர்கள். அதனை யோசித்துப் பாருங்கள் எதற்கு சொல்கிறேன் இன்று குழந்தைகளுக்கு அம்மா என்ற வார்த்தை சொல்லிக் கொடுத்தது முதலில் அம்மா தான், அன்பு தான் எல்லாம் உணர்த்தும் திமிரும் வீரமும் அல்ல, வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை
உயிர் காலேஜ் என்றால் ஷு
செத்த காலேஜ் என்றால் மியூசியம் என்று எங்க பரமக்குடியில் கூறுவார்கள்,
என்னுடைய புகழை பேசுவது மியூசியம் அது தான் செத்த காலம். நான் மேடையில் பேசும்போது தான் எனக்கு உயிர் காலம் வரும். எனக்கு உத்வேகம் வந்தது. ஒரு மேடை என்பது யாரோட தோ அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். அதனை நாம் அபகரிக்க கூடாது. கல்லூரியில் சரியாக படிக்கவில்லை என்றால் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் இல்லையென்றால் திரும்பப்படி என்று கூறுவார்கள். அது போன்று தான் நானும் இன்னும் படித்துக் கொண்டே இருக்கிறேன். வேறொரு பள்ளி வேறொரு கல்லூரியில் தான் அது தான், நான் படித்த கல்வி ஏவிஎம் ஸ்டுடியோ இன்னும் உயிர்த்திருக்கிறது. எங்க போனாலும் பெரியாரைப் பற்றி பேசுவேன் இங்கு பேசாமல் இருப்பேனா,
பெரியாரிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று எங்க அம்மாவிடம் காசு கேட்டா கொடுக்க மாட்டார்கள். வேறு நபரிடம் புகைப்படம் எடுக்கப் போகிறேன் என்று காசு வாங்கி சென்று புகைப்படம் எடுப்பேன். இந்த நிகழ்ச்சியில் விளக்கை ஏற்றுவதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியாமல் மற்றவர்களை நான் ஊக்குவித்தேன். நாங்கள் நாத்திகாரர்கள் அல்ல பகுத்தறிவாளர்கள், கல்லூரியும் ஒரு விவசாயம் தான் அது தான் ஒரு அறிவு விவசாயம் என கமலஹாசன் கூறினார்.