தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை முன்னிட்டு மதுரையில் உள்ள சில தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையின் பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மாநாட்டுத் திடலின் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்காக 200 அடி நீளம், 60 அடி அகலத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தொண்டர்கள் அமர்வதற்காக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100 அடி உயர கொடிக்கம்பம் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன், பாரபத்தியில் இருந்து ஆவியூர் வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தவெகக் கொடிகள் தொடர்ச்சியாக ஏற்றப்பட்டுள்ளன. மாநாட்டிற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் மாநாட்டு திடலை பார்வையிட்டு வருகின்றனர்.