spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா் மா.சுப்பிரமணியன்…

20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா் மா.சுப்பிரமணியன்…

-

- Advertisement -

கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் இழப்பீடு அரசு வழங்கியது.20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா் மா.சுப்பிரமணியன்…

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 10 லட்சமும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் சார்பில் 10 லட்சம் என 20 லட்சம் இழப்பீட்டு தொகை காசோலையை வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆறுதல் தெரிவித்து இழப்பீட்டு தொகை 20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

we-r-hiring

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி :-

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் இன்று காலை 30 வயது பெண் வரலட்சுமி 13-வது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இன்று காலை வேலைக்கு செல்லும்போது பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட வள்ளத்தில் தேங்கி இருந்த மழை நீரில் மின்கசிவு ஏற்பட்டு இருக்கிறது. அதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனடியாக அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தி அவரது உடல் பிரேத பரிசோதனை மேற்க் கொள்ளப்படுகிறது.

முதலமைச்சர் அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சார்பில் ரூ.10 லட்சமும் உட்பாசர் ஒப்பந்தக்காரர்கள் அமைப்பின் சார்பாக ரூ.10 லட்சமும் உடனடி நிவாரணமாக வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டார். இரண்டு குழந்தைகளின் எதிர்கால கல்வி செலவை திமுக கழகம் பொறுப்பேற்றுக் கொள்கிறது. இரு குழந்தைகளும் விரும்புகிற வரை உயர்கல்வி, கல்லூரி என்கிற வகையிலான கல்வி செலவை திமுக பொறுப்பேற்றுக்கொள்ளும் என குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளோம். தூய்மை பணியாளரின் இறுதி சடங்கு செலவை சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

உயிரிழந்த பெண்ணின் கணவா் உடல் பாதிப்பு உள்ளவர் அவருக்கான சிகிச்சையை அரசு மேற்க்கொள்ளும். கணவருக்கும் உபாசா ஒப்பந்ததாரர்களிடம் இலகுவான வேலையை தர வேண்டும் என சொல்லியிருக்கிறோம்.‌ மாநகராட்சி துணை ஆணையர் வேண்டுகோளை ஏற்று நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

தவறுக்கு நான் சப்பு கட்டு கட்டவில்லை. சம்பந்தப்பட்ட ஆணையரிடம் பேசி இருக்கிறேன். விரைவில் உயர் அலுவலர்கள் ராதாகிருஷ்ணன் ஐ ஏ எஸ் அவர் தலைமையிலான அலுவலர்களையும் நகராட்சி ஆணையர் தலைமையிலான அலுவலர்களையும் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலர்களையும் இணைத்துக் கொண்டு இந்த குடியிருப்பில் மின் இணைப்பு சம்பந்தப்பட்ட பணிகளுக்கு இவர்கள் சொன்ன குறையை மனதில் வைத்துக்கொண்டு விரைவில் சேவை துறை ஒரு கூட்டு ஆய்வை நடத்தி இங்கே உள்ள குறைகள் தீர்க்கப்படும் என்று கூறினாா்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர்! ரூ.20 லட்சம் நிவாரணம்…

MUST READ