- Advertisement -
மதுரையில் நடைபெறும் த.வெ.க மாநாட்டில் பெருமளவிலான மக்கள் கூடும் சூழலில், யாளி ஏரோஸ்பேஸ் மருத்துவ ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட ஏரோஸ்பேஸ் மருத்து ட்ரோன்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்த ட்ரோன்கள், மாநாட்டு நாளில் நேரடியாக செயல்பட்டு, அவசர சிகிச்சை உதவிகளை உடனடியாக சம்பவ இடத்துக்கு கொண்டு சேர்க்கும்.
யாளி ட்ரோன் மூலம் கொண்டு செல்லப்படும் அவசர மருத்துவப் பொருட்கள்:
- டிஃபிப்ரிலேட்டர்கள் (AEDs) – திடீர் இதய நின்று போக்கும் சூழலுக்கு.
- ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மாஸ்குகள் – மூச்சுத் திணறல் சிகிச்சைக்காக.
- அவசர மருந்துகள் – இதய நோய், அலர்ஜி, மயக்கம் போன்ற சூழலுக்கு.
- முதல் உதவி பெட்டிகள் – உடனடி சிகிச்சைக்காக.
- IV திரவங்கள், இன்ஃப்யூஷன் கிட்கள் – ஷாக் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டுக்கு.
- பாண்டேஜ், காஸ், பிளாஸ்டர் – காயம் மற்றும் இரத்தக்கசிவுக்கு.
- அவசர மருத்துவ உபகரணங்கள் – ஸ்ட்ரெச்சர், ஸ்ப்ளின்ட் போன்றவை.
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
