பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான விஷ முறிவு மருந்து உற்பத்தி செய்ய சிறப்பு ஆலையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.பாம்புக் கடியினால் எற்படும் உயிரிழப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிக்கோ)வேறு நிறுவனங்களுடன் இணைந்து விஷமுறிவு மருந்தை உற்பத்தி செய்வதற்கான ஆலை ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. பாம்புக் கடியால் ஏற்படும் மரணங்களை குறைக்கும் வகையில் உயர்தர மருந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் விஷ பாதிப்புகளுக்கான சிகிச்சையை எளிதில் அணுகுவதற்கும், பாம்புக்கடி மற்றும் விஷ மிருகங்களிடமிருந்து ஏற்படும் விஷபாதிப்புகளால் ஏற்படும் அச்சத்தை போக்கவும் இது உதவும். மேலும் இந்த மருந்துகளை ஆப்பிரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
