Homeசெய்திகள்தமிழ்நாடுமாட்டு வண்டியில் பயணித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

மாட்டு வண்டியில் பயணித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

-

- Advertisement -

 

மாட்டு வண்டியில் பயணித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
Viral Video

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாட்டு வண்டியில் பயணித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய சுயசரிதை புத்தகத்தால் சர்ச்சை’!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, தனது காரில் சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது சாலையில் சென்ற மாட்டு வண்டியைப் பார்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காரை நிறுத்தி விட்டு மாட்டு வண்டியில் பயணித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தி.மு.க. ஆட்சியில் டீசல் விலையை 4 ரூபாயைக் குறைப்பதாகக் கூறிக் குறைக்க விலை என்பதால், மாட்டு வண்டியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாட்டு வண்டி ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ