spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமலைப் பாதையில் 60 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து!

மலைப் பாதையில் 60 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து!

-

- Advertisement -

 

மலைப் பாதையில் 60 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து!

we-r-hiring

மேட்டுப்பாளையம், கல்லார் பகுதியில் 60 அடி பள்ளத்தில் ஜீப் கவிழுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில், மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்தார்.

‘கலகலப்பு 3’ படத்தில் நடிக்கும் கவின்…… மறுப்பு தெரிவித்த சுந்தர். சி?

நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்த கணேசன், தனது மனைவி மஞ்சுளா உடன் ஜீப்பில் கோயில் சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கல்லார் மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றுக் கொண்டிருந்த போது, ஜீப் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்துச் சென்ற மேட்டுப்பாளையம் தீயணைப்பு வீரர்கள் மஞ்சுளாவை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

‘பெண்களின் கதாபாத்திரம் வலிமையானதாக இருக்கும்’….. ரணம் படம் குறித்து வைபவ்!

விபத்து தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ