Homeசெய்திகள்தமிழ்நாடுஜெர்மனியில் செவிலியர்களுக்கு வேலை... ரூ.3 லட்சம் சம்பளம்

ஜெர்மனியில் செவிலியர்களுக்கு வேலை… ரூ.3 லட்சம் சம்பளம்

-

- Advertisement -

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஜெர்மனியில் செவிலியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் செவிலியர்களுக்கு வேலை... ரூ.3 லட்சம் சம்பளம்தமிழ்நாட்டில் முதலமைச்சரின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டம் மூலம் கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது நான் முதல்வன் பினிஷிங் பள்ளி (Naan Mudhalvan Finishing School) தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது ஜெர்மனியில் செவிலியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

நான் முதல்வன் பினிஷிங் பள்ளி மூலம் திறன்மிகு பயிற்சிகள் பெறும்போது உதவித்தொகை மற்றும் பயிற்சிக்கு பின்னர் வேலைவாய்ப்பு ஆகியவை ஏற்படுத்தி தரப்படும். தற்போது இதற்கான மாணவர்கள் பதவு தொடங்கியுள்ளது.

அந்த வகையில், நான் முதல்வன் பினிஷிங் பள்ளி மற்றும் ஜெர்மன் மொழி மையம் மூலம் ஜெர்மனியில் செவிலியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தில் ஜெர்மன் மொழி இலவசமாக கறிபிக்கப்படுகிறது. மேலும், செலிவியர் பணிக்கு 2300 யூரோ முதல் 3300 யூரோ வரை சம்பளம் வழங்கப்படும், அதாவது இந்திய மதிப்பில் மாதம் ரூ.3 லட்சத்திற்கு மேல் சம்பளம். விசா மற்றும் விமான டிக்கெட் இலவசமாக ஏற்பாடு செய்யப்படும்.

செவிலியர் பதவிக்கு விண்ணப்பதார்கள் 35 வயதிற்கு அதிகமாக இருக்கக்கூடாது. Bsc அல்லது GMN முடித்திருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகளுக்கு அதிகமான அனுபவம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை நான் முதல்வன் வலைத்தளம் அல்லது செய்தி மக்கள் தொடர்புத்துறை சமூக ஊடக பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம்.

MUST READ