spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த இடங்களை கனிமொழி ஆய்வு

சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த இடங்களை கனிமொழி ஆய்வு

-

- Advertisement -

சென்னை இராயபுரத்தில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தை சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த இடங்களை  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

we-r-hiring

இராயபுரத்தில் புகழ் பெற்ற ராபின்சன் விளையாட்டு மைதானத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவின் கழக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி மற்றும் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் ஆய்வினை மேற்கொண்டனர்.

வருகின்ற 2023 ஆண்டு தமிழர் திருநாளான “தை திருநாள்” பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெற இருக்கும் சென்னை சங்கமம் நிகழ்சியினை நடத்த
ராபின்சன் விளையாட்டு திடலை ஆய்வு செய்தனர்.

விளையாட்டு மைதானத்தின் உள்ளே அமைந்துள்ள மேடையை சீரமைப்பது,  கழிவறை வசதிகள், இருக்கைகள் போடுவதற்கான சாத்திய கூறுகள், பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல வழிகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் மாவட்ட செயலாளர் இளைய அருணா ஆகியோர் உடன் இருந்தனர்.

MUST READ