Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு இடைத்தேர்தல்- அதிமுக டெபாசிட் இழக்கும்: கே.என். நேரு

ஈரோடு இடைத்தேர்தல்- அதிமுக டெபாசிட் இழக்கும்: கே.என். நேரு

-

- Advertisement -

ஈரோடு தேர்தல் தோல்வி பயத்தில் அ.தி.மு.க பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துளார்.

கமல், சாருஹாசன் பெயரையும் சுகாசினி பெயரையுமா பயன்படுத்த முடியும்..?” -  கே.என்.நேரு | nakkheeran

திருச்சி பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் புதிய அங்கன்வாடி மையத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியில் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

we-r-hiring

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரோடு தேர்தல் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் கை சின்னம் வெற்றி பெறும். அ.தி.மு.க தேர்தல் தோல்வி பயத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். முதல்வர் கூறியது போல அதிமுக டெபாசிட் இழக்கும்.

திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவேரி பாலத்தில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து தார் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்து இன்னும் ஓரிரு நாளில் பாலம் திறக்கப்படும். குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் போது பொதுமக்களுக்கு ஒரு சில அசெளகரியங்கள் வரும் ஆனால் நீண்ட கால தீர்வுக்கு அது தான் வழி. பொதுமக்கள் சிரமங்களை பொறுத்து கொள்ள வேண்டும். திருச்சி மாநகரட்சி விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 24 மணி நேரம் குடிநீர் வழங்குவதற்கும், பாதாள சாக்கடை திட்டமும், சாலை வசதிகளும் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனை என்பது இல்லை. கோவை, சேலம், சங்கரன்கோவில், நாகர்கோவில், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் மெட்ரோ ஆய்வு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது” என்றார்.

 

MUST READ