Homeசெய்திகள்தமிழ்நாடு"சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்": மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி சுதந்திர தின வாழ்த்து!

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி சுதந்திர தின வாழ்த்து!

-

- Advertisement -

இந்தியாவின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் ஜனநாயக தத்துவங்களையும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயரிய பண்பாட்டையும் பாதுகாப்போம் என உறுதியேற்க அழைப்பு விடுத்துள்ளார்."சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்": மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி சுதந்திர தின வாழ்த்து!ஜனநாயக தத்துவங்களைப் பாதுகாக்க உறுதியேற்போம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது தாய்நாட்டின் விடுதலைக்காகத் தியாகங்கள் செய்த வீரர்களை நினைவுகூரும் இந்தச் சுதந்திர திருநாளில், நாட்டின் அடித்தளமாக விளங்கும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பண்பாட்டைப் பேணிக்காக்க நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். அத்துடன், சுதந்திரத்தின் முதன்மை நோக்கங்களான கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் ஜனநாயக தத்துவங்களை எந்தவித சேதாரமும் இன்றிப் பாதுகாத்திட இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உறுதியேற்போம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம்
நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதியாகவும், அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும், சுதந்திரத்தின் உண்மையான பலன்களை நாட்டின் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்க உழைப்பதே நாம் தியாகிகளுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாகும் என்றும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சமூகநீதி தழைக்கும் இந்தியாவை உருவாக்குவோம்: சுதந்திர தினத்தில் முதலமைச்சர் உறுதியேற்பு!

we-r-hiring

MUST READ