Homeசெய்திகள்தமிழ்நாடு'மக்களவைத் தேர்தல் 2024'- காலை 11.00 மணி நிலவரம்....தமிழகத்தில் 24.37% வாக்குப்பதிவு!

‘மக்களவைத் தேர்தல் 2024’- காலை 11.00 மணி நிலவரம்….தமிழகத்தில் 24.37% வாக்குப்பதிவு!

-

 

'மக்களவைத் தேர்தல் 2024'- காலை 11.00 மணி நிலவரம்....தமிழகத்தில் 24.37% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

சேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் காலை 11.00 மணி நிலவரப்படி, 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 17.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 26.58% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 20.09% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 55,000- ஐ கடந்தது!

திருவள்ளூர்- 24.93%, வடசென்னை- 22.05%, தென்சென்னை- 21.97%, ஸ்ரீபெரும்புதூர்- 23.53%, காஞ்சிபுரம்- 24.65%, அரக்கோணம்- 24.71%, வேலூர்- 24.67%, கிருஷ்ணகிரி- 24.82%, தருமபுரி- 25.66%, திருவண்ணாமலை- 24.92%, ஆரணி- 25.53%, விழுப்புரம்- 25.69%, சேலம்- 25.97%, நாமக்கல்- 26.07%, ஈரோடு- 25.37%, திருப்பூர்- 25.47%, நீலகிரி- 24%, கோவை- 24.54%, பொள்ளாச்சி- 25.02%, திண்டுக்கல்- 26.34%, கரூர்- 26.07%, திருச்சி 24.7%, பெரம்பலூர்- 25.62%, கடலூர்- 24.66%, சிதம்பரம்- 25.35%, மயிலாடுதுறை- 24.76%, நாகை- 24.92%, தஞ்சை- 24.96%, சிவகங்கை- 24.47%, மதுரை- 22.73%, தேனி- 24.99%, விருதுநகர்- 25.39%, ராமநாதபுரம்- 23.89%, தூத்துக்குடியில் 24.16%, தென்காசி- 24.51%, நெல்லை- 23.78%, கன்னியாகுமரி- 24.68% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

MUST READ