
பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் இன்று (ஜூன் 29) காலை உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது. குறிப்பாக, நடிகர் வடிவேலு இந்த படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளதும், படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளதும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் சிறப்புக் காட்சியை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து ரசித்தார். இந்த நிகழ்வின் போது, மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மாமன்னனைப் பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு, எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும், ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“சந்திராயன்- 3 விண்கலம் ஜூலை 13- ல் விண்ணில் ஏவப்படும்”- இஸ்ரோ அறிவிப்பு!
இதனிடையே, ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியானதையொட்டி, காசி திரையரங்கம் முன்பு பட்டாசுகளை வெடித்தும், மேளத் தாளங்கள் முழங்கக் கொண்டாட்டத்திலும் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.