Homeசெய்திகள்தமிழ்நாடுமீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்குகிறது!

மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்குகிறது!

-

 

மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்குகிறது!
File Photo

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் போது, நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளனர்.

இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா வரும் அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 23- ஆம் தேதி வரை நடைபெறும். இதற்காக, கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதியில் இரண்டாம் பிரகாரத்தில் அமைக்கப்படும் நவராத்திரி கொலு மண்டபத்தில் நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளிப் பக்தர்களுக்கு காட்சி அளிக்கவுள்ளனர்.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அஸ்வின் சேர்ப்பு!

மேலும், கொலு பொம்மைகளைக் கொடுக்க விரும்புபவர்கள் கோயில் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நவராத்திரி நாட்களில், ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பரதநாட்டியம், வீணை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

MUST READ