spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎண்ணெய் பாரம் ஏற்றிச்சென்ற மினி டெம்போ கவிழ்ந்து விபத்து... காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் ராஜேந்திரன்

எண்ணெய் பாரம் ஏற்றிச்சென்ற மினி டெம்போ கவிழ்ந்து விபத்து… காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் ராஜேந்திரன்

-

- Advertisement -

சேலம் அருகே எண்ணெய் பாரம் ஏற்றிச்சென்ற மினி டெம்போ வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், அதிலிருந்த எண்ணெய் சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தில் இருந்து பாமாயில் டின்களை ஏற்றிக்கொண்டு மினி டெம்போ வாகனம் ஒன்று மேச்சேரி நோக்கி சென்றுகொண்டிருந்தது. வேனை மேச்சேரி பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் ஓட்டிச்சென்றார். இன்று மதியம் மேச்சேரி அருகே புறாகூண்டு என்ற இடத்தில் சென்றபோது மினி டெம்போவின் டயர் திடீரென வெடித்தது.

we-r-hiring

இதில் கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ நிலை தடுமாறி சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஓட்டுநர் கார்த்தி மற்றும் அவரது உதவியாளர் மனோ ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், வாகனத்தில் இருந்த எண்ணெய் முழுவதுமாக சாலையில் கொட்டியது.

அப்போது, மேட்டூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தனது வாகனத்தை நிறுத்தி விபத்து நடைபெற்ற பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அத்துடன் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலையில் கொட்டி இருக்கும் எண்ணெயை அகற்றிடுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

MUST READ