ஆளுநர் தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார் – அமைச்சர் பொன்முடி
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கு 3 உறுப்பினர்களை அறிவித்த பிறகும் அதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுப்பதாக அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “சிண்டிகேட் பற்றி பேச தகுதி உள்ளதா என்று ஆளுநர் யோசித்து பேச வேண்டும். அரசியல் செய்ய நினைக்கிறார். சிண்டிகேட் கூட்டங்கள் பல்கலைக்கழகத்தில்தான் நடக்கின்றன. துணைவேந்தர்கள் கூட்டத்தை ஆளுநர் மாளிகையில் நடத்தலாமா? பல்கலை. சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடப்பதாக குற்றம் சாட்டும் ஆளுநர், அதே கூட்டத்தை ராஜ்பவனில் ஏன் நடத்தினார்? செயலாளரை கூட சந்திக்க முடியவில்லை என ஆளுநர் தெரிவிக்கிறார் ஆனால், நான் இல்லாமலேயே பல கூட்டங்களை அவர் நடத்தி இருக்கிறார். பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கு 3 உறுப்பினர்களை அறிவித்த பிறகும் அதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுக்கிறார்.

பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் தலையிடுவது சரியல்ல. அரசியல்வாதியை போல ஆளுநர் அறிக்கை வெளிடுவது சரியல்ல. தவறுகளை முறையாக சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வருவதற்காக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது. பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கு 3 உறுப்பினர்களை அறிவித்த பிறகும் அதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுக்கிறார். வழக்கமான 3 பேரை தவிர யு.ஜி.சி. சார்பில் ஒருவரை நியமிக்க வேண்டும் என ஆளுநர் கூறுகிறார். நாகை மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஆளுநர் மாளிகையிலா நடத்த முடியும்?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.