Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் இல்லை - அமைச்சர் விளக்கம்!

தமிழக கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் இல்லை – அமைச்சர் விளக்கம்!

-

- Advertisement -

sekar babu press meet

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ எந்த தடையும் விதிக்கப்படவில்லை என தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

we-r-hiring

ராமர் கோவில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வாய்மொழி மூலமாக தமிழக அரசு தடை விதித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், 22 ஜனவரி 24 அன்று நடைபெறும் ராமர் கோவில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வாய்மொழி மூலமாக தமிழக அரசு தடை விதித்துள்ளதாக செய்திகள் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வருத்தத்திற்குரியது . தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.

ஜூலை 11- ஆம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

இந்த நிலையில், நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டிற்கு தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ