spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழில் இல்லாத பெயர் பலகைகளை அழிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

தமிழில் இல்லாத பெயர் பலகைகளை அழிக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்

-

- Advertisement -

தமிழ் மொழி  அனைத்து துறைகள் மற்றும் தளங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 21ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ”தமிழைத் தேடி பயணம்” என்ற பிரச்சாரத்தை தொடங்கினார்.

அதை தொடர்ந்து தமிழைத் தேடி விழிப்புணர்வு  பரப்புரை பயணம், புதுச்சேரி கம்பன் கலையரங்கில் தற்போது தொடங்கியது.

we-r-hiring

இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி கே மணி,  தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்று உள்ளனர்.

அப்போது டாக்டர் ராமதாஸ் பேசியதாவது,

பாரதியார், மற்றும் பாரதிதாசன் இவர்களுடைய கவிதை யெல்லாம் வேகம், விவேகம் வரும். பாரதியார் விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். பாரதிதாசன் தமிழ் உணர்வை ஏற்படுத்தினார். புதுவையில் பிறமொழி வளர்ப்பது குறைவு, ஆங்கிலத்திற்கு மாற்றாக பிரெஞ்சு உள்ளது.

திரைப்படங்களில் மதுவும், புகைப்பதும் அதிகம். ஆனால் தமிழ் வளர்ச்சி குறைவு. இப்படி இருக்கும் போது, எங்கே போய் தேட முடியும் தமிழை. சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களில் தமிழிசையை வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டோம் என்றார்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து தமிழ் அறிஞர்களும் கருப்பு மைகளை கையில் வைத்துக்கொண்டு, புதுச்சேரியில் இருக்கின்ற தமிழில் இல்லாத பெயர் பலகைகளை அழிக்க வேண்டும். அதற்கு முன்பு கடை, கடையாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் முதலில் பிறமொழிகளில் பேசாமல் தமிழ் மொழியில் பேசவேண்டும்.

அப்படி பேசவில்லை என்றால் நீங்கள் உங்களுக்கே தண்டனை கொடுத்துக் கொள்ளுங்கள். அழிந்து வரும் தமிழை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு உங்களுடன் நான் உறுதுணையாக இருப்பேன் என்றார்.

MUST READ