Homeசெய்திகள்தமிழ்நாடு"தேசிய அளவில் இந்தியா கூட்டணி; தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி"- பார்வர்ட் பிளாக் கட்சி அறிவிப்பு!

“தேசிய அளவில் இந்தியா கூட்டணி; தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி”- பார்வர்ட் பிளாக் கட்சி அறிவிப்பு!

-

 

"தேசிய அளவில் இந்தியா கூட்டணி; தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி"- பார்வர்ட் பிளாக் கட்சி அறிவிப்பு!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இன்று (மார்ச் 06) காலை 10.30 மணிக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்து வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கதிரவன், “மாநில குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தோம். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். தி.மு.க.வில் மரியாதை இல்லை என்பதால் அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம். தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்க அ.தி.மு.க.விடம் கோரியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

MUST READ