Homeசெய்திகள்தமிழ்நாடுதனுஷ்க்கு எதிராக நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கு... தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!

தனுஷ்க்கு எதிராக நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கு… தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!

-

- Advertisement -

நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் தொடந்த மனு மீதான தீர்ப்பு மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

பிரபல தயாரிப்பாளரின் திருமண விழாவில் கலந்து கொண்ட தனுஷ் - நயன்தாரா .....வைரலாகும் வீடியோ!

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்த்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர முடியாது என்றும், காஞ்சிபுரத்திலோ அல்லது மும்பையிலோதான் தொடர் முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்றும், எனவே தனுஷ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு வொண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது என்றும், படப்பிடிப்பு காட்சிகள் 2020ம் ஆண்டே வெளியானபோதும், தாமதமாக 2024 ம் ஆண்டு தான் வழக்கு தொடரபட்டுள்ளது என்றும் நெட்பிளிக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.

அதற்கு படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது என்றும், நயன்தாரா ஒப்பந்தம் செய்யும்போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார் – தனுஷின் வொண்டர்பார் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் வொண்டர்பாருக்கு சொந்தமானது என்றும் வொண்டர்பார் நிறுவனம் தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் மீதான உத்தரவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

MUST READ