Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் உருவாகிறது மற்றொரு புயல்

மீண்டும் உருவாகிறது மற்றொரு புயல்

-

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவும் மாற வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறினால் தமிழகத்தையொட்டி கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 8 ஆம் தேதி தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை கொட்டித்தீர்த்தது. கடல் அலைகள் இயல்பைக் காட்டிலும் இரண்டில் இருந்து மூன்று அடி உயரத்திற்கு மேல் எழும்புகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய மாமல்லபுரம் அருகே கடற்கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது சுமார் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது குறிப்பிடத்தக்கது

MUST READ