Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக வெற்றி கழகத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் - விஜய் உத்தரவு!

தமிழக வெற்றி கழகத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் – விஜய் உத்தரவு!

-

'அரசியல் களத்தில் புதிதாக புரட்சி குரல் கொடுத்திருக்கும் விஜய்'..... வாழ்த்து தெரிவித்த நடிகர் பார்த்திபன்!

தமிழக வெற்றி கழகத்தில் புதிய நிர்வாகிகளை நியமித்து அதன் தலைவர் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர். கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்குக் கீழ்க்கண்டவாறு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். மாநிலச் செயலாள விஜயலட்சுமியும், மாநில இணைச் செயலாளராக யாஸ்மின் அவர்களும், மாநிலப் பொருளாளராக சம்பத்குமார் அவர்களும், மாநிலத் துணைச் செயலாளராக விஜய் அன்பன் கல்லணை அவர்களும், மாநிலத் துணைச் செயலாளராக எம்.எல் பிரபு அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் புதிய அணி, கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ