spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசின் திட்டங்களை அறிய புதிய வாட்ஸ்அப் சேனல் - தமிழ்நாடு அரசு

அரசின் திட்டங்களை அறிய புதிய வாட்ஸ்அப் சேனல் – தமிழ்நாடு அரசு

-

- Advertisement -

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்பு துறையில் புதிய வாட்ஸ் அப் சேனல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

அரசின் திட்டங்களை அறிய புதிய வாட்ஸ்அப் சேனல் - தமிழ்நாடு அரசுதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு  பல்வேறு முனைப்பான திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில்  மக்களின் குறைகளை நிறைவேற்றி வருகிறது.

we-r-hiring

அந்தத் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் ஏற்கனவே பேஸ்புக்,இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றம் youtube போன்ற சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

அரசின் திட்டங்களை அறிய புதிய வாட்ஸ்அப் சேனல் - தமிழ்நாடு அரசுஇந்த நிலையில் அடுத்த கட்ட முன்னெடுப்பாக டிஎன்டிஐபிஆர் கவர்ன்மெண்ட் ஆப் தமிழ்நாடு (TNDIPR,Govt.of Tamil Nadu)  என்ற பெயரில் புதிய whatsapp சேனல் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் லிங்கை கிளிக் செய்து, QR CODE – ஜ ஸ்கேன்  செய்வதன் மூலம், மகளிா் உாிமைத்தொகை,முதியோா் உதவிததொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் அறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

MUST READ