Homeசெய்திகள்தமிழ்நாடுஒரே கல்வி, ஒரே தேர்வு ஏமாற்று வேலை - சீமான் கண்டனம்

ஒரே கல்வி, ஒரே தேர்வு ஏமாற்று வேலை – சீமான் கண்டனம்

-

ஒரே கல்வி, ஒரே தேர்வு ஏமாற்று வேலை - சீமான் கண்டனம்
ஒரே கல்வி, ஒரே தேர்வு

சமமான வாழ்க்கை முறை இல்லாத நாட்டில் ஒரே கல்வி, ஒரே தேர்வு என ஏழை மாணவர்களுக்கு அநியாயம் செய்ய வேண்டாம் என்று மருத்துவ பொது கலந்தாய்வு குறித்து சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரை அடுத்த ஒரகடத்தில் உடற்பயிற்ச்சி கூடத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான எந்தவித திட்டமும் மத்திய மாநில  அரசுகளிடம்  இல்லை. ஏற்கனவே நீட் தேர்வினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே ரேஷன், ஒரே கலந்தாய்வு, ஒரே கல்வி கொள்கை என்பதையெல்லாம் ஏற்க முடியாது.

சமமான வாழ்க்கை முறை இல்லாதபோது சமமான கல்வி, ஒரே தேர்வு என ஏழை மாணவர்களுக்கு அநியாயம் செய்ய வேண்டாம் என கண்டனம் தெரிவித்தார். நமக்கென கலாச்சாரம் பண்பாடு வரலாறு உள்ளது. அதை படிக்க முடியாத கல்வி எதற்கு என கேள்வி எழுப்பினார்.

தமிழர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து அமித்ஷா பேசி வருவதாகவும் கோவில்களை பூட்டிவிட்டு போவது தான் சமூக நீதியா? உள்ளே சென்று வழிபடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறுவதற்கு ஒரு தலைவன் இல்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளது. கேரளாவில் அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு கூடியிருக்கிறது எனக் கூறினார்.

இறுதியாக தமிழரான நடிகர் விஜய் நாடாளுமன்றத் தேர்தலில் களம் காண வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு தமிழ் இனத்தில்  பிறந்தால்  மட்டும் தமிழராக முடியாது, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் இறுதிவரை போராடுபவரே  தமிழர். பட்டமளிப்பு விழாவெல்லாம் ஒரு விழாவா? ஆளுநருக்கு அதை விட முக்கியமான வேலைகள் இருக்கும். இதற்கெல்லாம் அவரை அழைக்கக் கூடாது.

திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு, ஆளுநருக்கு எதிராக பனகல்மாளிகை அருகே கத்திவிட்டு சென்று விடுவர்கள்.  அது அவர் காதில் கூட விழாது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்து  இரிடேட் செய்வதும் டென்ஷன் செய்வதும் தான் பாஜகவின்  வேலை என்று கூறினார்.

MUST READ