Homeசெய்திகள்தமிழ்நாடுபோராட்டக் குழுவினரின் எதிர்ப்பால் உயர்மட்ட குழு வருகை ரத்து!

போராட்டக் குழுவினரின் எதிர்ப்பால் உயர்மட்ட குழு வருகை ரத்து!

-

- Advertisement -

 

போராட்டக் குழுவினரின் எதிர்ப்பால் உயர்மட்ட குழு வருகை ரத்து!
Video Crop Image

பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள பகுதிகளில் நீர்நிலைகளை ஆய்வுச் செய்ய போராட்டக் குழு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, உயர்மட்டக் குழுவின் வருகை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு- துடுப்புப் படகு போட்டியில் வெண்கலம் வென்றது இந்திய அணி!

சென்னையில் விமான போக்குவரத்தை விரிவுபடுத்தும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏக்னாபுரம் உள்ளிட்டக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் எதிர்ப்பு குரலைப் பதிவுச் செய்து வருகின்றனர்.

விளை நிலங்கள் அதிகம் உள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலையம் கொண்டு வரப்பட்டால் தங்களது வாழவாதாரம் பாதிக்கப்படும் என்பதே கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில், பரந்தூரைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆய்வுச் செய்து அறிக்கை சமர்ப்பிக்க பேராசிரியர் தலைமையிலான உயர்மட்டக் குழுவை தமிழக அரசு நியமித்தது.

ஆசிய விளையாட்டு- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி!

இந்த குழு நீர்நிலைகளை ஆய்வுச் செய்வதற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், போராட்டக் குழுவினருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனையடுத்து, உயர்மட்டக் குழுவினரின் வருகை ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ