
2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும் ஆகஸ்ட் 4- ஆம் தேதி அன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி!
அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சித் தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆலோசனை நடத்தவுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 4- ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் துணைத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
ஓய்வை அறிவித்தார் பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்!
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், மாநில நிர்வாகிகள் நியமனம், தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவைக் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.