தமிழ்நாடு ஆந்திரா இடையே புதிய ஆறு வழிச்சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆந்திரா இடையே புதிய ஆறு வழிச்சாலைக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையிலான 126 கிலோமீட்டர் தொலைவிற்கு ஆறு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
சென்னை பெங்களூரு விரைவு சாலையை ஆந்திர மாநிலம் சித்தூர் உடன் இணைக்கும் வகையில் புதிய ஆறு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் பாரத் மாலா பிரயோஜனத் திட்டத்தின் கீழ் ரூபாய். 840 கோடி மதிப்பீட்டில் ஆறு வழிச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய சாலை அமைக்க 850 ஹெக்டர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட உள்ளது.
மேலும், அதில் தமிழ்நாட்டில் 309 ஹெக்டர் நிலமும், ஆந்திராவில் 541 எக்டர் நிலவும் கையகப்படுத்தப்பட உள்ளது.
