spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் - பிரேமலதா விஜயகாந்த்!

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் – பிரேமலதா விஜயகாந்த்!

-

- Advertisement -

பிரேமலதா விஜயகாந்த்

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “செல்வவளம் என்பது அதிகமான செல்வத்தை சேர்ப்பதல்ல, போதுமென்ற மனதைப்பெறுவதே உண்மையான செல்வமென”, வாழ்க்கை நெறிகளை அண்ணல் நபிகள் பெருமான் இஸ்லாமிய பெருமக்களுக்கு கூறியுள்ளதை அனைவரும் பின்பற்றி வாழவேண்டுமென்றும், இஸ்லாம் மார்க்கத்திற்கான கடமைகளில் ஒன்றானது புனித ரமலான் மாதத்தின் நோன்பு ஆகும். ஏழ்மையை அறிந்துகொள்ளவும், பசியின் கொடுமையை உணர்ந்துகொள்ளவும், உடல் நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் இந்த புனித ரமலான் நோன்பின் சிறப்பாகும். புனித குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள ஒரே மாதம் ரமலான் மட்டுமே. மக்கா, மதீனா சென்று தர்மம் செய்ய இயலாதவர்கள், ரமலான் மாதத்தில் நோன்பிருந்து தர்மம் செய்வது அதற்கு சமமாகும்.

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது!

கேப்டன் நினைவிடத்தில் (கோவிலில்) இந்த ஆண்டு (2024) ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி வரும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். “இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்கே”, என்ற அடிப்படையில் ஏழை, எளியவர்கள் மீது பரிவுகாட்டி, உண்ண உணவளித்து, உடுக்க உடைகொடுத்து, தானதர்மங்கள் செய்து, முப்பது நாட்கள் புனிதநோன்பினை முடித்துக்கொண்டு ரம்ஜான்திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ