spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலையில் தேமுதிகவிற்கு தொடர்பிற்கிறது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் - பிரேமலதா விஜயகாந்த்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேமுதிகவிற்கு தொடர்பிற்கிறது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் – பிரேமலதா விஜயகாந்த்

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேமுதிகவிற்கு தொடர்பிற்கிறது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து கட்சியினரையும் விசாரணை வலைக்குள் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு காவல்துறை செயல்படுகிறது என தகவல் வருகிறது.

தேமுதிகவை சேர்ந்த திருவள்ளூர் நகர செயலாளர் மணிகண்டனுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறான செய்தி. விசாரணை என்ற பெயரில் அழைத்துப் பேசியுள்ளனர். விசாரணையில் எதுவும் நிரூபிக்கப்படாததால் அவரை இந்த வழக்கில் உட்படுத்தாமல் அனுப்பிவிட்டனர். இதுதான் நேற்று நடந்திருக்கிறது. அதற்குள் தேமுதிகவிற்கும் தொடர்பு இருக்கிறது என்ற முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் அளித்த எந்த தொலைக்காட்சியாக இருந்தாலும் இது கண்டிக்கதக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ