- Advertisement -
SSLC, +1, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளுக்கான தேதி அட்டவணை கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.


12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 5ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை மே மாதம் 17ம் தேதியும், மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
