Homeசெய்திகள்தமிழ்நாடுரம்ஜான் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து!

-

- Advertisement -

 

தவெக தலைவராக கேரள மக்களை சந்திக்கும் விஜய்!

ரம்ஜான் பண்டிகை, தமிழகத்தில் வழக்கமான உற்சாகத்துடன் இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு உலக அமைதி, உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, ஒருவருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் திருநாள் வாழ்த்துக் கூறி மகிழ்ச்சியையும், அன்பையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.

“வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வளவு காலம் தாழ்த்துவாய்?”- தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி!

இதனிடையே, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முதலமைச்சர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ரம்ஜான் பண்டிகை- இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், “புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக் கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ