இந்தியாவில் ஆதார் எண் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநில அரசினால் தனி எண் உருவாக்க அதற்கான மென்பொருள் தயாரிக்க டெண்டர் விடும் பணி ஆரம்ப நிலையில் உள்ளது.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவுதளம் உருவாக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களினான Makkal ID அளிக்கப்படவுள்ளது. இந்தியாவில் ஆதார் எண் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநில அரசினால் தனி எண் உருவாக்கப்படுகிறது.


மத்திய அரசு ஆதார் எண் வழங்கியிருப்பது போல தமிழக அரசு மக்கள் ஐடி என்ற எண்ணை வழங்க திட்டமிட்டுள்ளது.
மாநில அரசின் மூலம் அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்களை இந்த ஐடி எண் மூலம் ஒருங்கிணைக்கவும் செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு ஆதார் எண் வழங்கியுள்ளது. அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றும் ஆதார் எண்ணை மையமாக வைத்தே செயல்படுத்தப்படுகிறது.
இதேபோல மாநில அரசு தமிழக மக்களுக்கு என தனியாக மக்கள் ஐடி என்ற 10 முதல் 12 இலக்க எண்களை அறிவிக்க உள்ளது.
தமிழ்நாடு மின் ஆளுமை முகாம்கள் மூலம் தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையை கணக்கெடுத்து மாநில குடும்ப தரவு தளம் உருவாக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் வசிக்கும் மக்களை வயது, பாலினம் சமூக அடிப்படையில் கணக்கிட்டு 10 முதல் 12 இலக்க ஐடி எண்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது மக்கள் ஐடி என அழைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இதற்கான பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தரவுகளை சேகரித்து இதற்கான தளத்தை நிர்வகிக்க திறமையும் அனுபவம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
மக்கள் ஐடி மூலம் தமிழ்நாட்டில் மக்கள் தொகையை துல்லியமாக கணக்கிடவும், அரசின் திட்டங்களை இந்த ஐ டி எண் மூலம் செயல்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
2013-14 ஆம் ஆண்டு ஆளுநர் உரையில் மக்கள் அப்ளிகேஷன் என்ற பெயரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில் மக்கள் ஐடி தயாரிக்க மென்பொருள் தயாரிக்கும் பணி ஆரம்ப நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
