நடிகர் சிவகுமார் வரைந்த அற்புதமான ஓவியங்கள்
தமிழ் திரையுலகில் 90களில் சிறந்த நடிகராக கலக்கியவர் நடிகர் சிவகுமார். இவர் 1941ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி பிறந்தார்.
1965ம் ஆண்டு வெளிவந்த காக்கும் கரங்கள் என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரின் தத்ரூபமான நடிப்பால் பலரின் மனதை கொள்ளையடித்தவர். நடிப்பு, நகைச்சுவை, மிரலவைக்கும் வசனங்கள் மூலம் தமிழ் திரையுலகில் ராக் ஸ்டாராக வளம் வந்தார்.
அவர் கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற தமிழ் இலக்கியங்களை நன்கு படித்து அடுத்த தலைமுறையினருக்கு அழகாக கொண்டு செல்லும் சிறந்த இலக்கிய சொற்பொழிவாளர் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
ஆனால், அவர் சிறந்த ஓவியர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. காந்தி, பெரியார், காமராஜர், டாக்டர் ராதாகிருஷ்ணன், கலைஞர், நகைச்சுவை நடிகர் நாகேஷ், ஜெமினி கணேசன், என். எஸ் கிருஷ்ணன் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற பல்வேறு படங்களை தத்ரூபமாக வரைந்து எல்லோரையும் ஆச்சிரியபட வைத்துள்ளார். அவர் வரைந்த ஓவியங்களை கண்டு ரசியுங்கள்.