Homeசெய்திகள்தமிழ்நாடுபீக் ஹவர் மின் கட்டண முறையை கண்டித்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஸ்டிரைக்

பீக் ஹவர் மின் கட்டண முறையை கண்டித்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஸ்டிரைக்

-

பீக் ஹவர் மின் கட்டண முறையை கண்டித்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஸ்டிரைக்

மின் நிலை கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றுவருகிறது.

Image

தமிழக மின்வாரியம் சார்பாக உயர்த்தப்பட்டுள்ள 430 சதவீத நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், பரபரப்பு நேர கட்டணம், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மல்டி இயர் டாரிப் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி காரணம்பேட்டை பகுதியில் உண்ணாவிரத போராட்டமும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் கடிதம் மற்றும் இமெயில் அனுப்பும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் வருகின்ற 25-ம் தேதி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் நெட்டிங் எம்ராய்டரி பிரிண்டிங் சாயா அலைகள் என 19 சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இன்று கதவடைக்கும் போராட்டம் நடைபெறுகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு இன்று வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.

Image

இதேபோல் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள முந்திரி தொழிற்சாலைகள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

MUST READ