spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?"-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!

“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!

-

- Advertisement -

 

"இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?"-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!

we-r-hiring

இலங்கைக்கு சென்ற முருகன் உள்பட மூன்று பேரிடம் இலங்கை குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைந்தார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சூழலில் தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் இலங்கை தூதரகம் மூலம் அவர்களுக்கு பாஸ்போர்ட் பெற்று தந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இந்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இலங்கை தூதரகத்தின் அனுமதியைத் தொடர்ந்து, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சியில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு சென்றனர்.

“தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாதா?”- நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!

குறிப்பாக 33 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் தங்கள் சொந்த நாடான இலங்கைக்கு சென்றனர். அவர்களிடம் கட்டுநாயக்க விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து இந்தியா சென்றது எப்படி என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ