தேர்தல் என்றால் கைது நடவடிக்கை கூடாதா? என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு!
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (ஏப்ரல் 03) நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை கைது செய்திருப்பதாக வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட அமலாக்கத்துறையின் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், “டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஆரம்பக்கட்ட விசாரணையே நடந்துள்ளது. முதலில் காவலில் எடுத்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தற்போது எதிர்ப்பது ஏன்? தேர்தல் என்றால் கைது நடவடிக்கை கூடாதா?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யான தகவல்களை நீதிமன்றத்திற்கு அளிக்கிறார். போதுமான ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அரசியலில் இருப்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கொலை செய்தால் அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? முறைகேட்டில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொடர்பை விசாரணையின் முடிவில் தான் தெரிந்துக் கொள்ள முடியும்.
“மோடியின் குடும்பம் ED, IT, CBI தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
மதுபானக் கொள்கையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது” என்று வாதிட்டார்.