
ஆடு திருடர்களால் காவல் உதவி சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 7வது முறையாக நீட்டிப்பு!
திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், கடந்த 2021- ஆம் ஆண்டு நவம்பர் 20- ஆம் தேதி அன்று புதுக்கோட்டை அருகே ஆடு திருடர்களைப் பிடிக்கச் சென்ற போது, கொள்ளையர்களால் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து, இளைஞர் மணிகண்டன் மற்றும் இரண்டு சிறுவர்களை அதிரடியாக கைது செய்தனர். சிறுவர்கள் மீதான வழக்கு புதுக்கோட்டை சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
“மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
மணிகண்டன் மீதான வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 47 சாட்சிகளின் அறிக்கையும், சுமார் 200 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. வாதங்கள் அனைத்தும் நிறைவுப் பெற்ற நிலையில், பூமிநாதனை கொலைச் செய்த குற்றத்திற்கு மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ரூபாய் அபராதமும், சாட்சியங்கள் மறைத்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறையும், பூமிநாதனின் செல்போனை சேதப்படுத்திய குற்றத்திற்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி பூரண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
