spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு‘தமிழ்நாடு’ என்கிற பெயரையே அதிமுக ஆதரிக்கும் - ஜெயக்குமார்..

‘தமிழ்நாடு’ என்கிற பெயரையே அதிமுக ஆதரிக்கும் – ஜெயக்குமார்..

-

- Advertisement -

தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயர் என்றும்,  தமிழ்நாடு என்ற பெயரே அதிமுக ஆதரிக்கிறோம் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அதிமுக அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டம் தொடர்பாக  இந்தக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.  இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். விஜயகுமார் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

we-r-hiring

அதிமுக அலுவலகம்

ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,“மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்து இருக்க கூடிய கருத்து பண்பாடு இல்லாத மிருகத்தனமான செயல். அவரை அடையாளம் காட்டியது அதிமுக தான். அதிமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் வழி வந்தவர்கள் , தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயராகும் தமிழ்நாடு என்ற பெயரே அதிமுக ஆதரிக்கிறோம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

கொரனோ தற்காலிக செவிலியர்கள் மீதான பணிவாய்ப்பு மறுப்பு என்பது திமுக அரசின் தவறான செயல். திமுக அரசு விழா அரசாக மட்டுமே செயல்பட்டு வருகிறது.  விவசாயிகளை வற்புறுத்தி ரூ. 33க்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் குறைவான விலையில் பொங்கல் கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகிறது. 8 வழி சாலை திட்டம் ஆட்சிக்கு முன் மற்றும் ஆட்சி அமைத்த பின் வேறுபட்ட பச்சோந்தித்தனமான கருத்துக்களை திமுக தெரிவித்து வருகிறது. “ என்று தெரிவித்தார்.

MUST READ