தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம்!

Published by
santhosh
Share

 

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம்!

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ ….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த ஏப்ரல் 06- ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தினந்தோறும் சுவாமி திருவீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஏப்ரல் 20) காலை 08.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தஞ்சை மேலவீதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் தியாகராஜ சுவாமி- கமலாம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேகப் தேரை வடம்பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தாரை, தப்பட்டை, நாதஸ்வரம் என பாரம்பரிய இசை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருப்பதால் 300- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

‘பிரேமலு 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

கோடைக்காலம் என்பதால் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் வைக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி, தஞ்சைக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று (ஏப்ரல் 20) தஞ்சையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
Published by
santhosh
Tags: Chariot Festival Chithirai Thiruvizha 2024 Devotees thanjai