8.27 லட்சம் மாணவர்கள் எழுதிய 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு, மார்ச் மாதம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 3412 தேர்வு மையங்களில், 7.99 லட்சம் பள்ளி மாணவர்களும் 27 ஆயிரம் தனித்தேர்வர்களுமென 8.27 லட்சம் பேர் இந்த ஆண்டு பொது தேர்வு எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை நடைபெற்று, மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளுடன் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலைப் பெற வேண்டுமென்பதாலும், பதவியேற்பு, அமைச்சரவை ஒதுக்கீடு என அரசியல் பரபரப்பான சூழலில், ஏற்கனவே அறிவித்தபடி மே 8ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய அரசு அமைந்ததும், அரசின் ஒப்புதலை பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டுமென்பதால், முடிவுகளை வெளியிட தாமதமாகுமென தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநரைச் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறாரா?
