Homeசெய்திகள்தமிழ்நாடு"ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாதவர் முதல்வர் விஜய்!" - உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!

“ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாதவர் முதல்வர் விஜய்!” – உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!

-

- Advertisement -

தமிழகத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள மிக முக்கியமான வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அவசரகதியாகக் கைது செய்துள்ள ஆளுங்கட்சியின் செயல் கடுமையான கண்டனத்திற்குரியது என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வன்மையாகக் கண்டித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கையும், அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளையும் அடியோடு தோலுரித்துக் காட்டினார்."ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாதவர் முதல்வர் விஜய்!" - உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!

​”நீதிமன்ற உத்தரவையே மீறும் சர்வாதிகாரப் போக்கு!”
சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறனற்ற தன்மையையும் மக்கள் விரோதப் போக்கையும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்ற பயத்தினாலேயே இந்தத் திட்டமிட்ட கைது நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோதும், உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் காவல்துறையை ஏவிவிட்டு கைது செய்வது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்று ஆர்.எஸ்.பாரதி சாடினார். “ஜனநாயகத்தைப் பற்றி ஏபிசிடி கூடத் தெரியாத ஒரு முதலமைச்சர் ஆட்சியில் அமர்ந்தால் எப்படிப்பட்ட அடக்குமுறைகள் நடக்குமோ, அதுதான் இன்று தமிழகத்தில் அரங்கேறி வருகிறது” என்று அவர் விமர்சித்தார்.

we-r-hiring

​”தண்ணி பிரச்சினை கேட்டால் திரிஷாவைக் இழுப்பதேன்?”
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பேசும்போது மேடைகளில் எழும் சாதாரணக் கேள்விகளைத் திரித்து, அதன் மீது அவதூறு வழக்கு தொடுப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார. டெல்டா மாவட்ட விவசாயிகள் வறட்சியாலும் பட்டினியாலும் வாடி வதங்கும்போது அதைக் கவனிக்கத் திராணியில்லாத அரசு, தனிப்பட்ட நபர்களின் பெயர்களைச் சுட்டிக்காட்டி அரசியல் திசைதிருப்பல்களில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலங்களில் தமக்கு எதிராகப் பல வழக்குகள் போடப்பட்டிருந்தாலும், இதுபோன்று அவசர அவசரமாகக் கைது செய்யும் அராஜகப் போக்கு எப்போதுமே இருந்தது கிடையாது என்றார்."ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாதவர் முதல்வர் விஜய்!" - உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!

​”கலைஞரை ஒத்த உத்வேகத்துடன் எழும் இளைய தலைவர்!”
கடந்த 1963 மற்றும் 1965-ஆம் ஆண்டுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தந்தை கலைஞரைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் சென்ற வரலாற்றைச் சுட்டிக்காட்டிய ஆர்.எஸ்.பாரதி, இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் கைது செய்ததன் மூலம் அவரை ஒரு உண்மையான ‘இளைய தலைவராக’ ஆளுங்கட்சியே உயர்த்தியுள்ளது என்று குறிப்பிட்டார். திமுக இதுபோன்ற அடக்குமுறைகளைக் கண்டு ஒருபோதும் அஞ்சாது என்றும், சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் இந்தச் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு தூத்துக்குடியிலேயே விசாரணை — உயர் நீதிமன்றம் உத்தரவு! 

MUST READ