Homeசெய்திகள்தமிழ்நாடு"காவிரியை விட்டுக் கொடுத்தாலும் பரவாயில்லை; விஜய்யைக் கேட்கக் கூடாது!" —அரசியல் விமர்சகர் ஹஸீப் அனல் பறக்கும்...

“காவிரியை விட்டுக் கொடுத்தாலும் பரவாயில்லை; விஜய்யைக் கேட்கக் கூடாது!” —அரசியல் விமர்சகர் ஹஸீப் அனல் பறக்கும் பேச்சு!

-

- Advertisement -

எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளிக்க அச்சப்பட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தவிர்க்கிறாரா முதலமைச்சர்? – சாடல்!"காவிரியை விட்டுக் கொடுத்தாலும் பரவாயில்லை; விஜய்யைக் கேட்கக் கூடாது!" —அரசியல் விமர்சகர் ஹஸீப் அனல் பறக்கும் பேச்சு!

காவிரி நீர் விவகாரம், மாநில உரிமைகள் மற்றும் தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து ‘அரண் செய்’ ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், பிரபல அரசியல் விமர்சகர் ஹஸீப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை அடகு வைத்துவிட்டு பிம்ப அரசியலை முன்னெடுக்கும் மலிவான மனநிலை வளர்ந்து வருவதாக அவர் அதில் கவலை தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மரபை மீறும் மௌனம்
“காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால மற்றும் இறுதித் தீர்ப்புகள், உச்ச நீதிமன்றத்தின் உறுதிப்படுத்தப்பட்ட உத்தரவுகள் என அனைத்துக் காலகட்டங்களிலும் தமிழகத்தின் உரிமைகளைக் காக்க அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூட்டப்படுவதே இங்கு வழக்கமான நடைமுறை. காவிரிப் பிரச்சினை பூதாகரமாக வெடிக்கும் போதெல்லாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, மாநிலத்தின் ஒட்டுமொத்தக் குரலாக அதை எதிர்கொள்வதே முறை. ஆனால், கூட்டத்தைக் கூட்டினால் எதிர்க்கட்சிகளின் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டி வரும், பல மூத்த தலைவர்களின் முன்னிலையில் பேச வேண்டிய சூழல் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகவே முதலமைச்சர் அத்தகைய கூட்டங்களைத் தவிர்க்கிறார்.”"காவிரியை விட்டுக் கொடுத்தாலும் பரவாயில்லை; விஜய்யைக் கேட்கக் கூடாது!" —அரசியல் விமர்சகர் ஹஸீப் அனல் பறக்கும் பேச்சு!“காவிரி வேண்டாம்; தலைவரின் ஸ்டைல் போதும்!” – மலிவான அரசியல்
தொடர்ந்து பேசிய அவர், மாநில உரிமைகள் பலியிடப்படுவது குறித்துக் காரசாரமான கருத்துகளைப் பதிவு செய்தார், “தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி நீரைக் கர்நாடகத்திற்கே முழுமையாகத் தாரைவார்த்தாலும் பரவாயில்லை; ஆனால் எங்கள் தலைவரை யாரும் எந்தக் கேள்வியும் கேட்டுவிடக் கூடாது என்ற ரீதியில் ஒருசிலரின் மனோபாவம் அமைந்துள்ளது வேதனை அளிக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறையிலிருந்த காலத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை இது நினைவூட்டுகிறது. ‘காவிரியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்; எங்கள் தலைவரின் உடையையும் ஸ்டைலையும் பார்த்தே நாங்கள் சந்தோஷமாக இருந்து கொள்கிறோம்’ என்ற பாணியில், மாநில உரிமைகளைத் தூக்கி எறியும் மலிவான அரசியல் கலாச்சாரத்திற்கு ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.”

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் சூழலில், அரசியல் விமர்சகர் ஹஸீப்பின் இந்த அதிரடிப் பேட்டி சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தஞ்சையில் அதிரடியாகக் குவிக்கப்படும் காவல்துறை- 5 மாவட்ட எஸ்.பி.க்கள் தஞ்சைக்கு விரைவு!

MUST READ