Homeசெய்திகள்தமிழ்நாடுபேரம் பேசிக்கொண்டே 15சவரன் நகைகளை தவறவிட்ட மூதாட்டி! ஆட்டோ பதிவெண் மூலம் மீட்ட ...

பேரம் பேசிக்கொண்டே 15சவரன் நகைகளை தவறவிட்ட மூதாட்டி! ஆட்டோ பதிவெண் மூலம் மீட்ட போலீசார்

-

- Advertisement -

பேரம் பேசிக்கொண்டே 15சவரன் தங்க நகைகளை ஆட்டோவில் தவறவிட்ட 63வயது மூதாட்டி

சிசிடிவி காட்சிமூலம் ஆட்டோ பதிவெண்ணை கண்டுபிடித்து நகைகளை மீட்டுக் கொடுத்த இராயபுரம் போலீசார். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சபுராபீ (வயது 63)  பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்கு ஆடைகள் வாங்க வந்துள்ளார். ஆடைகள் வாங்கிவிட்டு மீண்டும் திருவல்லிக்கேணி பகுதிக்கு செல்ல அவ்வழியாக சென்ற ஆட்டோவையும் கையில் இருந்த கட்டை பைகளோடு மடக்கி  பேரம் பேசியுள்ளார்.

இவ்வாறாக பேரம் பேசியபடி ஒரு ஆட்டோவில் தனது கையில் இருந்த மூன்று கட்டைப்பைகளில் ஒன்றை ஆட்டோவில் வைத்து உள்ளார். பின்னர் ஆட்டோ தொகை அதிகமாகவே  வேண்டாம் என ஆட்டோவை திருப்பி அனுப்பியுள்ளார்.

பேரம் பேசிக்கொண்டே 15சவரன் நகைகளை தவறவிட்ட மூதாட்டி! ஆட்டோ பதிவெண் மூலம் மீட்ட போலீசார்

இவ்வாறாக அடுத்த ஆட்டோவை பேரம் பேசும் போது தான் நகை பணம் மற்றும் ஏடிஎம் கார்டு போன்றவைகளை வைத்திருந்த கட்டை பையை முன்னராக ஓர் ஆட்டோவில் மறந்து வைத்திருந்தது நினைவிற்கு வந்தது

உடனடியாக சபூராபி சத்தமிடவே அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் அருகாமையில் உள்ள இராயபுரம் காவல் நிலையத்திற்கு மூதாட்டியை  அழைத்து சென்று புகாரின் பேரில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தார். ஆட்டோவின் பதிவெண்ணை கொண்டு மணலியில் வசித்து வரும் கிஷோர் என்பவரின் ஆட்டோ என தெரியவந்தது.

பின்னர் தொலைபேசி வாயிலாக கிஷோரை தொடர்பு கொண்ட போலீசார் அவர் அளித்த விலாசத்திற்கு சென்று  கிஷோரின் வீட்டிற்கு சென்று ஆட்டோவை பார்த்த போது சபூராபி வைத்த இடத்திலேயே அந்த பை இருந்ததும் அந்த பையை ஆட்டோ ஓட்டுநர் கவனிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

பேரம் பேசிக்கொண்டே 15சவரன் நகைகளை தவறவிட்ட மூதாட்டி! ஆட்டோ பதிவெண் மூலம் மீட்ட போலீசார்

பின்னர் அதில் இருந்த 15 சவரன் நகை மற்றும் 1500 ருபாய் பணம் ஏடிஎம் கார்டு போன்றவற்றை போலீசார் மீட்டு காவல் நிலையத்திற்கு சபூராபீயை அழைத்து அவரிடம் கொடுத்தனர்

மேலும் காவல்துறையினர் தொடர்பு கொண்டதும் சரியான விலாசத்தை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரையும் போலீசார் பாராட்டினர்

MUST READ