spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசத்துணவு கூட மேற்கூரை இடிந்து விபத்து- பணியாளர் படுகாயம்

சத்துணவு கூட மேற்கூரை இடிந்து விபத்து- பணியாளர் படுகாயம்

-

- Advertisement -

சத்துணவு கூட மேற்கூரை இடிந்து விபத்து- பணியாளர் படுகாயம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பாலூர் அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு கூடம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சத்துணவு பணியாளர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பாலூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பபட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அப்பளியில் அமைந்துள்ள சத்துணவு கூடத்தில் இன்று காலை சாந்தி என சத்துணவு பணியாளர் மாணவர்களுக்கு உணவு சமைத்து கொண்டிருந்த போது கூடத்தின் மேற்கூரை இடிந்து பணியாளர் சாந்தியின் தலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

we-r-hiring

Image

கடலூரில் நள்ளிரவு பெய்த மழையால் கட்டிடம் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர். படுகாயம் அடைந்த சாந்தி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

MUST READ